ஒரு
சாதாரண கிராமம். அளவிலான ஒரு ஓட்டு வீடு. கிராமங்களில் பெரும்பாலும் நீர்
தொட்டி வெளியே அமைக்கப்பட்டு இருக்கும். அன்று இரவு 9:30 மணி, உணவை
முடித்து கை அலம்பி விட்டு, வீட்டு வாசலில் ஏற எத்தனித்த அவனின் காலின்
சுண்டு விரலில் ஏதோ கடித்து விட்டது. மங்கலான வெளிச்சம். சுர்ரென்று ஏறும்
விசம். என்னவென்று பார்க்க ஒரு கூகுரல் கொடுத்து மின்விளக்கை ஏற்றும் முன்,
ஒரு சிறு பதற்றம் அவன் மனதில், ஒரு வேளை பாம்பாக இருக்க கூடுமோ என்று.
எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற ஆசாத்திய நம்பிக்கை ஒருபுறம்.
சில நிமிட தேடலில் ஒரு பூரான்(Centipede) மட்டும் தென்பட்டது. ஆனால் வலி
கால் முழுவதும் பரவுவது போல உணர்ந்த அவன் தனது தந்தையுடன் அருகில் உள்ள
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று இரண்டு ஊசி போட்டு கொண்டு,
எதற்கும் மாவட்ட(நாமக்கல்) தலைமை மருத்துவமனைக்கு சென்று ஒரு இரத்த
பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கிளம்பினர். ஒரு துரித பேருந்து நிற்காமல்
சென்றது. அதை தொடர்ந்து அடுத்து வந்த பேருந்தை பிடித்து இரவு 11.00 மணி
அளவில் மருத்துவமனையை அடைந்தனர். மருத்துவரிடம் ஒரு பரிந்துரை பெற்று
இன்னும் ஒரு ஊசியும், இரத்த பரிசோதனைக்கு ஊசியுடனும் வந்த செவிலியர் ஒரு
மெல்லிய புன்முறுவலோடு கூறினார், நான் உன்னோடு பள்ளியில் படித்தவள் தான்
நினைவில்லையா என்று ! அவளே பெயர் மற்றும் ஊரை வைத்து தான் தெரிந்து கொண்டதாக கூறினாள். அவன் அந்த பள்ளியை விட்டு வந்து 16 வருடங்கள்
ஆகின்றன. தன்னுடன் பயின்றவர்கள் ஒரு அரசு செவிலியராக மக்களுக்கு
பணியாற்றுவதை பல வருடங்களுக்கு பிறகு ஒரு எதிர்பாராத சந்திப்பில் தெரிந்து
கொள்வதில் தான் என்ன ஒரு மன நிறைவு. இரத்தம் உறைதல் சோதனைக்கு பிறகு
மருத்துவர் வீட்டிற்கு போகலாம் என்று கூறினார். மிகுந்த நன்றியையும்
சந்திப்பின் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டு நடு இரவில் கோவை செல்லும்
ஒரு துரித பேருந்தில், ஓட்டுனரிடம் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள
அவன் கிராமத்தில் நிறுத்த அனுமதி பெற்று, பயணத்தை தொடர்ந்தான். இது அவனின்
மூன்று மணி நேர பயணம். இங்கு எது வேண்டுமானலும் எப்போது வேண்டுமானாலும்
நடக்கலாம். வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது!
Subscribe to:
Post Comments (Atom)
Kolli Hills - One day trip !!
It was a third Saturday of the first month of 2020, right after pongal celebrations, even before my alarm rings, I was roused to the crowing...
-
After Sathuragiri, we (I and my friend) wanted to visit Velliangiri and we were waiting for the right time. Finally we decided to go on Sat...
-
I had to attend my college friend's marriage function on Feb-3 Sunday at Tirunelveli. My initial plan was to roam around Kanyakum...
-
It was a third Saturday of the first month of 2020, right after pongal celebrations, even before my alarm rings, I was roused to the crowing...
Super ji...👌👌..yeah, Life is unexpected
ReplyDeleteThank you so much!
Delete